தேடல் தொடங்கியதே..

Saturday 6 July 2013

கீழக்கரை 'டாட் காம்' வலை தளத்தில் ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ’அப்ளிகேசன்’ உதயம் - இணைய வாசகர்கள் மகிழ்ச்சி !

கீழக்கரை நகரில் நடந்தேறும் செய்திகளை, உலகெங்கும் வாழும் கீழக்கரை நண்பர்கள் அறிந்து கொள்ளும் நோக்கோடு, கீழக்கரை நண்பர்களால், கீழக்கரை 'டாட் காம்' உருவாக்கப்பட்டு, கடந்த 04.06.2010 அன்று கீழக்கரை வடக்குத் தெருவை  சேர்ந்த, ஈடிஏ குழும மனித வளத்துறை செயல் இயக்குனர் M.Y. அக்பர் கான் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டு, வெற்றிகரமாக இடை விடாது இயங்கி வருகிறது. தற்போது தற்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அனைவரும் தங்களுடைய கைப்பேசியினூடே ஒரு சொடுக்கில் பதிவுகளை வாசிக்கும் வண்ணம், ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் அப்ளிகேசன்களை உருவாக்கி இருக்கிறது.



அதற்கான துவக்க நிகழ்ச்சி நேற்று 05.07.2013) அமீரகத்தின் முக்கியஸ்தலமாகிய துபை மால் வளாகத்தில் நடைபெற்றது. மிக எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில், கீழக்கரை.காம் குழுவை சேர்ந்தவர்களும், இதர நண்பர்களும் குழுமி அப்ளிகேசன்களை செயல்படும் வண்ணம் இணையதளத்தில் பதிவேற்றினர். இந்த அப்ளிகேசனைப் பற்றிய சிறிய கலந்தாய்வுப் பட்டறையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இணைய வாசகர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.



கீழக்கரை.காம். இணைய முகவரி 







 புகைப் பட விளக்கம் :  
கீழக்கரை டாட் காம் நிர்வாகிகள் 

சீனி முஹம்மது,தாஹா இப்ராஹீம், ஹமீது சமது ஃபத்தா, முஹம்மது மிட்லஜ், அபு பைசல், கீழை இளையவன் என்கிற முஹம்மது சாலிஹ் ஹுசைன், கீழை ராசா என்கிற ராஜாகான் முஹம்மது, செய்யது இப்ராஹீம் அலி, ஹமீது பைசல், ஹமீது யூசுப் பக்ஸ், முஹம்மது ரசீம் 

இது குறித்து கீழக்கரை டாட் காம் வலை தளத்தின் முதன்மை நிர்வாகி ஹமீது சமது ஃபத்தா அவர்கள் நம்மிடையே பேசும் போது "கீழக்கரையில் நடை பெறும் அன்றாட செய்திகளையும், கீழக்கரை நகர் தகவல்கள் பலவற்றையும் தாங்கி வருவதோடு, வளைகுடாவின் வேலை வாய்ப்பு செய்திகள்,விழிப்புணர்வு செய்திகள்,வபாத்து செய்திகள் உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் அளித்து வருகிறோம்.தற்போது துவங்கப்பட்டிருக்கும் அப்ளிகேசன்களும்,வாசகர்களுக்கு வசதியாக இருக்கும். 

நமதூர் வியாபார விளம்பரங்களையும் வழங்கி பல புரவலர்கள் இதற்கு உறுதுணையாய் இருந்து வருகின்றனர். நமதூர் வியாபார நண்பர்கள், தங்களுடைய வியாபார முன்னேற்றத்திற்கு கீழக்கரை.காம் ல் விளம்பரங்கள் பிரசுரிக்க விரும்புபவர்கள் வரவேற்கப்படுகின்றனர். மேலும் வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு தருமாறு, கீழக்கரை டாட் காமின் நண்பர்கள் குழு சார்பாக கேட்டுக் கொள்கிறேன்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 


கீழக்கரை டாட் காமின் மற்றுமொரு நிர்வாகி கீழை ராஜா என்கிற ராஜா கான் முஹம்மது அவர்களின் கருத்துப் பதிவில் "கல்வெட்டுகளிலும், காகிதங்களிலும் பதிக்க பட்ட வரலாறுகள், காலத்தால் அழிந்து விடக்கூடியது என்பதால் இணையத்தில் நம் வரலாற்றை நவீன கல்வெட்டுகளாக செதுக்கி கீழக்கரை வரலாற்றில் இடம் பெற போகும் தம்பிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...இந்த சாதனை சரித்திரத்தில் ஊரில் அக்கரை கொண்ட அனைவரும் இணைய வேண்டுமென்ற உங்களின் எண்ணத்திற்கு எல்லாம் வல்லோன் நற்கூலி வழங்குவானாகவும் ஆமீன்." (அன்புடன் கீழைராஸா (முகம்மது ராஜாக்கான்) துபாயிலிருந்து...)


ஆன்ட்ராய்ட் கைப்பேசி மற்றும் டேப்ளட்களுக்கு கீழ் காணும் இணைப்பை சொடுக்கி பதிவிறக்கிக் கொள்ளலாம்.

ஆன்ட்ராய்ட் கைப்பேசி மற்றும் டேப்ளட்களுக்கு :

தொடர்புக்கு:

ஹமீது சமது ஃபத்தா – 00919629900405 / 00971-55-5150616


கீழக்கரை டாட் காமின் பணிகள் மென் மேலும் சிறக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment