தேடல் தொடங்கியதே..

Saturday 25 February 2012

வாடிக்கையாகி வரும் ஆர். எஸ். மடை அருகே தாக்குதல்கள் - நடவடிக்கை எடுக்கக் கோரி கீழக்கரை பொது மக்கள் வேண்டுகோள்

நேற்று முன் தினம் (22.02.2012) இரவு 9 மணியளவில் கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்த கிதிர் மரிக்கா என்பவரின் மகன் அப்துல் அலீம்  இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு தனியார் பேருந்து ஒன்றில் திரும்பி கொண்டிருந்த போது, இளைஞர் அலீமை ஆர்.எஸ்.மடை அருகே பஸ்சில் இருந்து கீழே தள்ளி, 10 க்கும் மேற்ப்பட்ட ஆர்.எஸ்.மடையை சேர்ந்த மர்ம நபர்கள், கும்பலாக சேர்ந்து தாக்குதல் நடத்தி விட்டு ஓடியதாக கூறப்படுகிறது.


பாதிக்கப்பட்ட அப்துல் அலீம்

பலத்த காயமடைந்து கிடந்த‌ அலீமை அவ்வழியே வந்த சின்னக்கடை தெருவை சேர்ந்த ஜாஹிர் என்பவர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தாக தெரிகிறது. தற்போது இவர் மேல் சிகிச்சைக்காக, இராமநாதபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே போன்று இரவு நேரங்களில் பேருந்தில் பயணிக்கும், கீழக்கரை  பொது மக்கள் மீது, இது போன்ற வன் முறை தாக்குதல்கள் தொடர்ந்து நடை பெறுவது வருத்தமளிக்கிறது.


இராமநாதபுரம் அருகில் ஆர். எஸ். மடை கிராமம்


இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இது வரை சம்பந்தப்பட்ட எந்த ஒரு நபர்களும் கைது செய்யப் படவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட அலீம் அவர்கள் கூறுகையில் "என்ன காரணங்களுக்காக, என் மீது இந்த கொலை வெறி தாக்குதல் நடை பெற்றது என்று தெரியவில்லை.என்னை போன்று எந்த ஒரு அப்பாவியும் பாதிக்கப்படக் கூடாது" என்று சரியாக பேசவே முடியாமல் தெரிவித்தார்.  


நன்றி : தினத் தந்தி

இது குறித்து சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி, நேற்று காலை 11 மணியளவில்  300 க்கும் மேற்பட்ட கீழக்கரை பொதுமக்கள், இராமநாதபுரம் எஸ். பி அலுவலகத்திற்கு திரண்டு சென்று மனு கொடுத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து துரித நடவடிக்கை எடுக்க வலியுறித்தி, கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்பு கழகம் சார்பாகவும் முதலமைச்சர் தனிப் பிரிவு, தென் மண்டல சரக காவல் துறை தலைவர், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கீழக்கரை பொது மக்களிடம் இருந்து  பெறப்பட்ட  மனு மீது உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என காவல் துறை அதிகாரிகளால் உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.

IAS தேர்வு எழுத, இப்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - தேர்வாளர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !


IAS முதனிலை தேர்வுகளுக்கான ( PRELIMINARY EXAMINATION - 2012 ) அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வாணையம் 04.02.2012 அன்று  அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.03.2012
அதிகாரப்பூர்வ இனைய தள முகவரி  

இது குறித்த விரிவான தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க பின் வரும்  மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இனைய தள முகவரியை சொடுக்கி விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க





இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த தேர்வுக்கான பாடத் திட்டங்கள் மற்றும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களைப் பற்றி அறிய, பின் வரும் கீழை இளையவன் IAS வழிகாட்டியை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
   
கீழை இளையவன் IAS வழிகாட்டி


நம் கீழக்கரையை சார்ந்த IAS தேர்வுக்கு முயற்சிக்கும் தேர்வாளர்கள் அனைவரும், உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பித்து, கடைசி நேர பரபரப்பைத் தவிர்க்குமாறு கீழை இளையவன் செய்திகள் வலை தளம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த செய்தியை வாசிக்கும் அன்பாளர்கள் அனைவரும், தேர்வுக்கு முயற்சிக்கும் பலருக்கும் சென்றடைய ஏதுவாக, நம் நண்பர்கள் அனைவருக்கும் இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

Sunday 19 February 2012

கீழக்கரையில் பாலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - ஒன்றுபடுவோம்.. வெற்றி பெறுவோம்

கிழக்கரையில் இன்று (19.02.2012) காலை 11 மணியளவில் கீழக்கரை முக்கு ரோட்டில், நகராட்சி சார்பாக பாலித்தீன் உபயோகிப்பதால் ஏற்படும் தீவினைகளை களைவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எற்படுத்துவதற்க்காக பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நகராட்சித் தலைவர் அவர்களும், நகராட்சித் துணைத் தலைவர் அவர்களும் முன்னிலை வகித்து துவங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு எக்ஸ்னோரா அமைப்பினரும் சிறப்பான வழிகாட்டுதல்களை வழங்கினர். 





பெரும்பாலான நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, அனைத்து கடைகளுக்கும் ஊர்வலமாக சென்று, பிளாஸ்டிக் பைகள் விற்பதை கைவிட்டு, நகராட்சிக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டனர். 





இதில் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்டத்தின் மாணவர் அணியினரும், மகளிர் அணியினரும் பங்கு கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






இந்த பேரணி நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவர் ராபியத்துல் கதரியா அவர்களும், துணைத் தலைவர் ஹாஜா முகைதீன் காக்கா அவர்களும் அனைத்து மாணவ மாணவிகளுடன் இணைந்து, எல்லா மக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக,  சாலையோரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி, நகராட்சி வண்டிகளில் கொட்டினர். இவர்கள் அனைவரும் வீதிகளில் உலா வந்த அனைத்து மக்களிடமும், வெகு சிறப்பாக விழிப்புணர்வு செய்தது, பார்ப்பவர்கள் அனைவரிடமும் 'இனி பாலித்தீன் உபயோகிக்கக் கூடாது' என்ற உறுதி மொழியினை எடுக்க செய்தது.

இறைவன் நாடினால், ஒன்றுபடுவோம்.. வெற்றி பெறுவோம் !