தேடல் தொடங்கியதே..

Saturday 11 February 2012

'கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை' புதிய ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் - பொது மக்கள் மகிழ்ச்சி

நம் கீழக்கரை நகரில் தற்போது ஆம்புலன்ஸ் தேவையின் அவசியப்பாடு அதிகரித்து வருகிறது. இங்கு ஆம்புலன்ஸ் வசதிகள் மிக அரிதாகிவிட்ட காரணத்தால், திடீர் விபத்துக்களில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல், வழியிலேயே இறந்து விடும் பரிதாப நிலையே இருந்து வருகிறது.

பெரும்பாலும் இரவு நேரங்களில் முதியவர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு, மூச்சித்திணறல் போன்ற பிரச்சனைகளுக்கு, முதலுதவி செய்து, உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல இந்த ஆம்புலன்ஸ் வசதி அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.


அறக்கட்டளை தலைவர். ஆசிக் அவர்கள், வாங்கப்பட்ட ஆம்புலன்சுடன்..


தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக செயலாற்றி வந்தாலும் கூட, அதன் நிறுத்த தடம் இராமநாதபுரமாக இருப்பதால், நாம் இங்கிருந்து தொலைபேசியில் அழைத்து, அவர்கள் கீழக்கரைக்கு வந்து சேர 1 மணி நேரம் எடுக்கிறது. இந்த அசௌகரியங்களை களைய, நம் கீழக்கரையில், கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளையினரால், புதிய ஆம்புலன்ஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கிழக்குத் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆம்புலன்ஸ்

 


இது குறித்து கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளையின் பொருளாலர் அமான் அவர்கள் கூறுகையில் "இறைவனுடைய மாபெரும் கருணையால், எங்களுடைய கிழக்குத்தெரு நண்பர்கள் குழுவால், ஏழை எளிய மக்களுக்கு உதவும் மருத்துவ சேவையை முக்கிய நோக்கமாக கொண்டு சென்ற 01.01.2012 அன்று கீழக்கரை கிழக்குத் தெருவில் ஆரம்பித்தோம். கிழக்கு முஸ்லீம் அறக்கட்டளை என்ற பெயரில் துவங்கிய நம் அறக்கட்டளை 'கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை'  என்று மாற்றம் செய்து, தற்போது சுறு சுறுப்போடு  பணிகளை துவங்கியுள்ளோம்.

நாம் இது குறித்து ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி

அதன் முதல் கட்டமாக இன்று முதல் அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை துவங்கி உள்ளோம். நம் கீழக்கரை நகரின் பொது மக்கள் அனைவரும் இந்த சேவையை 24 மணி நேரமும் பயன்படுத்திக் கொள்ள எதுவாக, மிகுந்த விழிப்போடு இந்த இன்றியமையாத சேவையை செயல்படுத்த காத்திருக்கிறோம்." என்று உற்சாகத்துடன்  தெரிவித்தார்.


அவசர ஆம்புலன்ஸ் தேவைக்கு, அழைக்க வேண்டிய அலைபேசி எண்கள்

இந்த அவசர ஆம்புலன்ஸ் சேவை ! நம் கீழக்கரை நகருக்கு அவசியம் தேவை !! கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளையினரால்,  இந்த ஆம்புலன்ஸ் சேவை தகுந்த நேரத்தில், அனைத்து மக்களுக்காகவும் ஆரம்பிக்கப்பட்டு இருப்பது, பொது மக்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

1 comment:

  1. இந்த சேவையை நல்ல விதமாக செயல்படுத்த ஏக இறைவன் அருள்புரிவானாக.

    ReplyDelete