தேடல் தொடங்கியதே..

Friday 20 January 2012

"வேலை தேடும் இளைய சமுதாயமே வருக" - மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் !

நமது இராமநாதபுரம் மாவட்டம், மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது பொருளாதார முன்னேற்றம், வேளாண்மை வளர்ச்சி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் மிகவும் பின் தங்கிய மாவட்டமாகவே இருக்கிறது. பெரும்பாலான இளைய சமுதாயத்தினர் பெரும்பாலும் வெளிநாட்டு வேலை வாய்ப்பையே நம்பியுள்ளனர்.


கீழக்கரை முஸ்லிம் பஜாரில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை

தற்போது இராமநாதபுரத்திலுள்ள  செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நாளை (21.01.2011) சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, தமிழ் நாடு வேலை வாய்ப்பு துறையின் கீழ் இயங்கும் இராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படும் "தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்" நடை பெற உள்ளது. இதில் பத்தாம் வகுப்பு படித்தவர்களிலிருந்து பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் சென்னை, திருச்சி, கோவை போன்ற பெரிய நகரங்களில் இருந்து முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கு கொண்டு, தகுதியானவர்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.




இது குறித்து கீழக்கரை சாலை தெருவை சேர்ந்த பட்டதாரி முஹம்மத் யூசுப் கூறுகையில் "நாளை நடக்க இருக்கும் வேலை வாய்ப்பு முகாமை ஏற்படுத்தி தந்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.  இது போன்ற வேலை வாய்ப்பு முகாம்களை அடிக்கடி நடத்தி, வேலையில்லாத அனைவருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்" என தெரிவித்தார்.

இது குறித்து இராமநாதபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது "இதில் அனைத்து வேலை தேடும் படித்தவர்களும் கலந்து கொண்டு பயனடையலாம். அதே நேரம், படித்து முடித்து விட்டு, ஏற்கனவே நம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

நம் கீழக்கரையிலும், படித்து முடித்து விட்டு வேலை தேடுவோர்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கீழை இளையவன் செய்திகள் தளம் சார்பாக கேட்டு கொள்கிறோம். மேலும் இது குறித்து தகவல்கள் பெற இராமநாதபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தை 04567 - 221160  எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

1 comment: